தமிழ் சினிமாவில் நீளமான கூந்தல் கொண்ட அழகிய நடிகையாக ரசிகர்களால் அழைக்கப்படும் திவ்யபாரதி, ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், பின்னர் ‘மகாராஜா’, ‘கிங்ஸ்டன்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து, இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துவரும் திவ்யபாரதி, அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்கப்போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே நிலவுகிறது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “‛பேச்சுலர்’ படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் அடுத்த திரைப்படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக கதைகளை கவனமாக தேர்வு செய்து வருகிறேன். எனது முதல் 10 திரைப்படங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தற்போது நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், நான் தான் சரியாக யோசித்து முடிவு செய்கிறேன். எல்லாம் நல்லதாகவே அமையும்” என தெரிவித்துள்ளார்.