இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவான ‛‛லோகா – சாப்டர் 1’’ தற்போது பாக்ஸ் ஆபிஸில் வியப்புக்குரிய வெற்றியைப் பெற்றுக்கொண்டு வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். தற்போது இது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உலகளவில் ரூ.200 கோடி வசூலை எட்டியுள்ள இந்த ‛லோகா’’ படம், புதிய சாதனையை படைத்துள்ளது. பலரும் இப்படத்தைப் பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ‘லோகா’ யுனிவர்ஸில் இடம்பெறும் புதிய கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நடிகர் துல்கர் சல்மான் ‛‛சார்லி’’ என்ற கதாபாத்திரத்தில், டோவினோ தாமஸ் ‛‛மைக்கேல்’’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.