விஷால் நடித்த ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தொடர்ந்து ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கேப்டன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன் ஒன்று கண்டேன்’, ‘மாமன்’, ‘தக் லைஃப்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இருந்து விலகப்போவதாக ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் அறிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், ‛‛சமூகவலைதளம் என்னிடமிருந்த உண்மையான சிந்தனையை பறித்துவிட்டது. என் சொற்களையும் மொழியையும் பாதித்துவிட்டது. எளிய மகிழ்ச்சியையும் சந்தோஷமற்றதாக மாற்றிவிட்டது. இனி வாழ்க்கையில் மேலும் அர்த்தமுள்ள தொடர்புகளையும் அர்த்தமுள்ள சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன். நான் அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்க முடிந்தால், பழைய பாணியில் உங்களுடைய அன்பை எனக்குத் தாருங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகை அனுஷ்கா சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், ஐஸ்வர்யா லட்சுமி முற்றிலுமாக விலகப்போவதாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.