நடிகை அனுஷ்கா ஷெட்டி சமூக வலைதளங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். சக நடிகைகளைப் போல அதிகமாக சமூக வலைதளங்களில் செயல்படாத இவர், தனது காதி படத்தைப் ப்ரோமோஷன் செய்வதற்காக எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார்.

ஆனால், படம் பாக்ஸ் ஆபீஸில் சிறப்பாக வரவேற்பைப் பெறாததால், அடுத்த பட அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, அனுஷ்காவின் ஒரு அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்புவதாகவும், அதற்காக சிலகாலம் சமூக வலைதளங்களில் இருந்து விலகப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “விரைவில் புதிய படங்களுடனும், அன்புடனும் உங்களை சந்திப்பேன்” என கூறி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.