சமீபத்தில் வெளியான மலையாளப்படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படம் 200 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் உமனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதையை எழுதியவர் நடிகை சாந்தி பாலச்சந்திரன். தரங்கம், ஜல்லிக்கட்டு, குல்மொஹர் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தமிழில் ஸ்வீட் காரம் காபி தொடரிலும் நடித்திருந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

‘லோகா’ குறித்து அவர் கூறியிருப்பதாவது: “இந்த படம் என் இதயத்திற்குப் மிகவும் நெருக்கமானது. டொமினிக் மற்றும் லோகா குழுவோடு சேர்ந்து நாட்டுப்புறக் கதைகள், கற்பனை, வலுவான பெண் கதையை ஒருங்கிணைத்தது சவாலானதோடு நிறைவான பயணம். உலகம் முழுவதும் பார்வையாளர்கள் இப்படத்தை இத்தனை அன்போடு ஏற்றுக்கொள்வதைப் பார்க்கும் போது நான் அளவிட முடியாத நன்றியுணர்வில் மூழ்குகிறேன்.
சேப்டர் 1 போலவே, சேப்டர் 2விலும் எனது பணி தொடர்கிறது. எங்கள் திறமையான கூட்டாளர்களை உற்சாகப்படுத்தும் திரைக்கதைகளை தொடர்ந்து எழுதுவதே எனது ஆசை. அதோடு நடிப்பையும் தொடர்வேன். இரண்டும் எனக்கு இரண்டு கண்கள் போன்றவை.” என்றார்.