தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ராதாரவி, வில்லன் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் ரசிகர்களை கவர்ந்தவர். நடிகர் சங்க பொதுச்செயலாளராக நீண்டகாலம் பணியாற்றியவர். உடல்நலக்குறைவு காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் நாகா வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் தில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சாண்டி – ஆஸ்னா சவேரி ஜோடி, ராதாரவிக்கு இணையாக மூத்த நடிகை அம்பிகா நடிக்கிறார். ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதுடன் அடுத்த கட்டமாக சென்னையிலும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ராதாரவி, “மீண்டும் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியை தருகிறது. புதிய கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. சினிமா என் ரத்தத்தில் ஊறிய ஒன்று. இத்தனை ஆண்டுகள் அதில் பயணிப்பது பெருமை. இனி என் ஆட்டத்தை பாருங்கள்,” என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.