மலையாள சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ளார் நடிகை பார்வதி திருவத்து. இதுவரை குறைவான எண்ணிக்கையிலேயே நடித்தாலும், அனைத்தும் வலுவான கதைகளும் கதாபாத்திரங்களும் கொண்ட படங்களாக இருந்தன. உணர்ச்சிப் பூர்வமான கதைகள், பெண்ணியம் பேசும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர்.

முதல் முறையாக, போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையாக உருவாகும் ‘பிரதம திருஷ்டிய குற்றக்கார்’ என்ற படத்தில் நடிக்கிறார் பார்வதி.
மேலும், இதில் அவர் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் என்பது சிறப்பு. சாஹத் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 25ஆம் தேதி தொடங்கும் என தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.