மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் கடைசியாக நடித்த “லக்கி பாஸ்கர்” படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக, செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள புதிய படம் “காந்தா”. இதில் “மிஸ்டர் பச்சன்” படத்தில் அறிமுகமான பாக்யஸ்ரீ, துல்கருக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ஸ்பிரிட் மீடியா இணைந்து தயாரித்த இப்படத்தில் சமுத்திரக்கனியும், ராணா டகுபதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மறைந்த பிரபல நடிகரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளத. டீசரும் பாடல்களும் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. நாளை வெளியாக இருந்த இப்படம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “காந்தா படத்தை உங்களுக்குச் சிறந்த அனுபவமாக வழங்கவேண்டும் என்பதற்காக நாம் தொடர்ந்து உழைத்து வருகிறோம். எங்களின் லோகா திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், அதன் வெற்றியைத் தொடர்ந்து, காந்தாவையும் சிறப்பாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். எனவே காந்தா படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.