தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம் “மிராய்” தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். கார்த்திக் கட்டம்னேனி இயக்கியுள்ள இப்படத்தில், மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். இப்படம் வரும் 12ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில், ரித்திகா தனது விருப்பமான கதாபாத்திரங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார். அவர், “எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன்.
திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள எந்தக் கதாபாத்திரமும் நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன். குறிப்பாக சூப்பர் ஹீரோ படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘அனுமான்’ எனக்கு ரொம்பப் பிடித்த படம். அதுபோல ஆக்சன், காதல் கதைகள் தான் எனக்கு மிகவும் பிடித்த வகைகள்” என்றார்.