பிரபல நடிகை ஷோபனா சினிமாவில் மட்டுமல்ல, பரதநாட்டிய கலைஞர் மற்றும் ஆசிரியராகவும் பெயர் பெற்றவர். சமீபத்தில் மோகன்லாலுடன் நடித்த துடரும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, அதில் அவரின் கதாபாத்திரமும் நடிப்பும் பெரும் பாராட்டைப் பெற்றது.

சமீபத்திய பேட்டியில் அவர், “நான் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். இதற்காக இரண்டு இயக்குநர்களிடம் பேசியபோது, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொன்னார்கள். அதற்கு நான் ‘மம்முட்டி நடித்தபோது ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?’ என்று கேட்டேன்.
திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். அந்த பாத்திரத்தில் நடிப்பது எளிதல்ல; தோற்றம், பேச்சுவழக்கம், குரல் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். ஆனால் அது ஒரு சவாலாக இருக்கும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.