ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கூலி படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் ஹிந்தி நடிகர் அமீர்கானையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, அடுத்ததாக அமீர்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவார் என்ற தகவல்கள் பரவின. அதோடு கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தையும் இயக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால் சமீபத்திய தகவல்களின் படி, கூலி படத்திற்குப் பிறகு ரஜினி – கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் லோகேஷ் இறங்கியுள்ளார். இதில் இருவரும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுவதால், அமீர்கான் நடிக்கும் படத்திற்கான திட்டத்தை அவர் தற்போதைக்கு கைவிட்டுள்ளார் என கூறப்படுகிறது. அதோடு, கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தையும் தள்ளி வைத்துள்ளார் என கூறப்படுகிறது.