தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் பாராட்டுக்களை பெற்றன.

சமீபத்தில் அவர் நடித்த “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி” படத்திற்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளாக எந்தப் படம் வெளியாவதில்லை. அதற்குக் காரணம் உடல் எடையை குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டதுதான் எனக் கூறப்பட்டது. நீண்ட காலமாக காத்திருந்த அவரது ‘காட்டி’ திரைப்படம் பல தாமதங்களுக்குப் பிறகு நேற்று வெளிவந்தது. கிரிஷ் இயக்கிய இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளிலேயே சுமார் 2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அனுஷ்காவுக்கு மீண்டும் வரவேற்பை பெற்றுத் தந்த படமாக ‘காட்டி’ அமைந்துள்ளது.