நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள ‘விலாயாத் புத்தா’ என்ற புதிய திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படம், ‘புஷ்பா’ திரைப்பட பாணியில், சந்தன மரக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஊர்வசி தியேட்டர்ஸ் மற்றும் ஏவிஏ புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. ஜெயன் நம்பியார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பிரபல மலையாள எழுத்தாளர் ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய ‘விலாயாத் புத்தா’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, தமிழ் டீசரில் இடம்பெற்ற “குட்டி வீரப்பன்”, “புஷ்பா இன்டர்நேஷ்னல், நான் லோக்கல்” போன்ற வசனங்கள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.