நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” திரைப்படம் உலகளவில் ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மக்களிடம் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், எதிர்காலத்தில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் மலையாளத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் ஹிட் ஆகியுள்ளது. இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்ட இப்படம், கடந்த 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதற்கிடையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “பழமையான கதைகளையும் மர்மத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட தனித்துவமான கலவை இந்த திரைப்படம். இப்படத்துக்குக் கிடைக்கும் ரசிகர்களின் அன்பால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமாவில் இப்படிப்பட்ட படங்களுக்கு எப்போதும் என் அன்பையும் ஆதரவையும் வழங்க ஆவலுடன் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.