தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச். வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் விஜய்யின் கடைசி படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படம் வெளியாகிய பின் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார் என்பதால், படத்துக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் வரும் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர்.
இதற்கிடையில், இயக்குநர் எச். வினோத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படக்குழு ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டது.