திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், ஏடு தந்தானடி தில்லையிலே… என பக்தி மனம் கமழும் அற்புத பாடல்களை தந்த பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார். சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் ‘முருகவேல் காந்தி’. 1967 முதல் பாடல்கள் எழுதி வந்தார். பெரும்பாலும் பக்தி பாடல்கள் எழுவதில் தான் இவர் வல்லவர். ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்கள், 4000க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
