சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு மற்றும் தமிழில் லோகேஷ் அஜ்லிஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லெவன்’. இப்படத்தில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்திருந்தார். தொடர்ச்சியான கொலைகள் குறித்து சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியிருந்தது.

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், தொடர்ந்து ஓடிடியிலும் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது இயக்குனர் லோகேஷ் அஜ்லிஸ் அடுத்தப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.