சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மிஷ்கின், ‘‘நான் முழுமையாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். அரசியல் குறித்து எந்த கருத்தையும் முழுமையாகச் சொல்ல இயலாது. சினிமாவில் இருக்கும் வரை விஜய்யை தம்பி என அன்பாக அழைத்தேன். ஆனால் தம்பி விஜய் இப்போது அரசியல் கட்சித் தலைவராகிவிட்டார். அதனால் எனக்கும் அவருக்கும் உள்ள உறவு வித்தியாசமானது.

ஆகையால் அரசியல் தொடர்பான எந்த கருத்தையும் நான் கூற மாட்டேன். என்னைப் பொறுத்தவரை விஜய் கடுமையாக உழைக்கும், மிகவும் நல்ல மனம் கொண்ட மனிதர். நான் அறிந்தது இதுதான். இதற்கு அரசியல் சாயம் பூசத் தேவையில்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘நாங்கள் கிராமங்களில் வாழ்ந்த காலத்தில் எங்கள் தெருவில் ஒரு ஆண் நாய், ஒரு பெண் நாய் மட்டுமே இருந்தன. அவை எங்களை பாதுகாப்பாக பார்த்துக்கொண்டன. மனிதர்கள் கருத்தடை செய்வது போலவே நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாததால், நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது நாய்களால் மக்கள், குழந்தைகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். பல இழப்புகளும் ஏற்படுகின்றன. உயிரை அழிப்பது கொடுமையான செயல். அதே சமயம், நாய்களால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுப்பது அவசியம். எனவே இந்த விஷயத்தை இரண்டு தரப்பையும் பார்த்து முடிவு எடுக்கவேண்டும் என்றுள்ளார்.