பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் கடந்த கொரோனா காலகட்டத்தில் பலருக்கும் செய்த உதவிகள் காரணமாக ரியல் ஹீரோ என்கிற இமேஜை ரசிகர்களிடம் பெற்றார். தொடர்ந்து அவ்வப்போது பலருக்கு உதவியும் வருகிறார். மும்பை மகாலட்சுமியில் உள்ள தனது அபார்ட்மெண்ட்டை 8.10 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார் சோனு சூட். 1497 சதுர அடி அளவிலான கட்டிடமும் 1247 சதுர அடி கார்பெட் ஏரியாவும் கொண்ட அபார்ட்மென்ட் இது.இந்த அப்பார்ட்மெண்ட்டை 2012ல் 5.16 கோடிக்கு தான் வாங்கினாராம் சோனு சூட்.
