தமிழில் கௌதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கமாலினி முகர்ஜி. அதற்கு முன்பே ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் அறிமுகத்துக்குப் பிறகு அவர் அதிகமாக தெலுங்கு சினிமாவிலேயே கவனம் செலுத்தினார்.

2014-ஆம் ஆண்டு ராம் சரண் நடித்த கோவிந்துடு அந்தரிவாடலே படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிறகு, கமாலினி தெலுங்கு படங்களில் நடிக்கவே இல்லை. அதன் பிறகு தமிழில் இறைவி, மலையாளத்தில் புலி முருகன் போன்ற சில படங்களில் மட்டும் தோன்றி, பின்னர் சினிமாவிலிருந்தே விலகி விட்டார்.
சமீபத்திய பேட்டியில் இதற்கான காரணத்தை வெளிப்படையாகச் பகிர்ந்துள்ளார் கமாலினி, அதாவது “கோவிந்துடு அந்தரிவாடலே” படப்பிடிப்பு நல்லபடியாகவே நடந்தது. ஆனால் படம் வெளியானபோது, என்னுடைய கதாபாத்திரம் திரையில் எப்படி காட்டப்பட்டிருக்கிறது என்று பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்தக் கதாபாத்திரம் தேவையில்லை என்று நினைத்திருந்தால் எடிட்டிங் டேபிளிலேயே அதை நீக்கிவிடலாம். ஆனால் அப்படிச் செய்யாமல், இப்படத்தில் ஏன் நடித்தோம் என்ற கேள்வி எனக்கு எழுந்தது. அந்த அனுபவத்தால்தான் அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். இது குறித்து சக நடிகர்கள் அல்லது படக்குழு காரணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்