தமிழில் ‘பேபி அண்ட் பேபி” படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நடிகர் ஜெய். தற்போது வினய் கிருஷ்ணா இயக்கும் வொர்க்கர் திரைப்படத்தில் நடிக்கிறார் . இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இப்படத்தில் கன்னட நடிகை ரீஷ்மா, யோகி பாபு, நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா மற்றும் வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் மூலம் நடிகை ரீஷ்மா தமிழில் அறிமுகமாக உள்ளார். இவர் ”ஏக் லவ் யா”, ”பானதரியல்லி”, ”யூஐ” மற்றும் ”வாமனா” ஆகிய கன்னட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, துருவா சர்ஜாவின் கேடி: தி டெவில் படத்திலும் நடித்திருக்கிறார். கேடி தி டெவில் திரைப்படம் வரும் செப்டம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.