Touring Talkies
100% Cinema

Friday, August 29, 2025

Touring Talkies

கதாநாயகனாக அறிமுகமாகும் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் தமிழில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவ்னித் இயக்கிய டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளிவந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. சில மாதங்களாக அபிஷன் ஜீவ்னித் தனது அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. குறிப்பிடத்தக்கது என்னவெனில், டூரிஸ்ட் பேமிலி படத்திலும் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்போது அபிஷன் ஜீவ்னித் நாயகனாக நடிக்கும் இப்படத்தை, அவரின் உதவி இயக்குநராக இருந்த மதன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக மலையாளத் திரையுலகின் இளம் நட்சத்திரமான அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.

இந்தப்படத்தை, ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் ஜியான் பிலிம்ஸ் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படத்தின் இணை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலனின் எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

- Advertisement -

Read more

Local News