ஆர்ஜின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கண்ணதாசன் புதிய படத்தை உருவாக்கி வருகிறார். ராஜ்குமார் ரங்கசாமி இயக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக Production No.1 என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்திற்கு பரத் எடிட்டிங், எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு, ஜோன்ஸ் ரூபர்ட் இசை ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர். (ஜோன்ஸ் ரூபர்ட் – பொறியாளன், சட்டம் என் கையில் படங்களுக்கு இசையமைத்தவர்).

ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் ஜோடியாக நடிக்கின்றனர். இயக்குநர் கே. பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கிங்ஸ்லி, டி. எஸ். ஆர், ஒளிப்பதிவாளர் ராஜுமேனனின் மகள் சரஸ்வதி மேனன், இயக்குநர் சாய் ரமணி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, நாமக்கல், கோவா போன்ற இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.