ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில், ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ள முதல் படம் புரோ கோட். இப்படத்தை டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்குகிறார்.
புரோ கோட் படத்தில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா, ஷரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் புரோமோ வீடியோவை ரவி மோகன் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.