மிகவும் புகழ்பெற்ற தி காட்ஃபாதர் (1972), தி காட்ஃபாதர்- 2 (1974), தி காட்ஃபாதர் -3 (1990) திரைப்படங்கள் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் செப்.12-இல் முதல்கட்டமாகவும் அடுத்தடுத்த பாகங்கள் முறையே அக்.17, நவ. 14ஆம் தேதிகளிலும் வெளியாகவிருக்கிறது. மரியோ பாஸோ எழுதிய நாவலின் அடிப்படையாக வைத்து இந்த மூன்று பாகங்களும் உருவாகின. மர்லான் பிராண்டோ, அல்பசினோ நடிப்பின் உச்சம் தொட்ட படங்களாக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
உலக சினிமாவின் அஸ்திவாரம் என அழைக்கப்படும் இந்தப் படங்களை மையமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன.
