பாலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான ரன்பீர் கபூர், ஆலியா பட் தற்போது அவர்கள் மும்பையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஆறு மாடியில் 250 கோடி ரூபாய் செலவில் சொகுசு பங்களா ஒன்றை கட்டி உள்ளார்கள். இந்த பங்களாவை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட அந்த வீடியோ வைரல் ஆனது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராமில் ‛மும்பையில் இடவசதி குறைவாக இருப்பதால் ஒரு வீட்டின் ஜன்னல் இன்னொரு வீட்டை பார்த்தபடி தான் வீடு கட்ட முடியும். அதற்காக இதை வீடியோ எடுத்து வைரலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இந்த வீடியோவை பதிவிட்டவர்கள் உடனே நீக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
