‘குட்டிப்புலி, லப்பர் பந்து, மாமன், டான்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துப் பிரபலமானவர் பால சரவணன். நகைச்சுவை நடிகர் என்பதைக் கடந்து சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார்.தற்போது பால சரவணனுக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அறிமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில், அவர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இதில் அவர் போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்காக சுமார் 10 கிலோ எடையை குறைக்க அவர் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
