சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்தவர் மறைந்த பிரபல நடிகர் ஜெய்சங்கர். தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் 2000ம் ஆண்டு மறைந்தார். இந்நிலையில் ஜெய்சங்கர் வீடு இருந்த கல்லூரி சாலைக்கு அவர் பெயர் சூட்ட வேண்டும் என ஜெய்சங்கர் மகனான டாக்டர் விஜயசங்கர், முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையை ‛ஜெய்சங்கர் சாலை’ என பெயர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
