அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள புதிய படம் ‘காட்டி’. இதில் அவர் கஞ்சா கடத்துபவராக சீலாவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரத்தம் சொட்டும் ஆக்ஷன் காட்சிகளிலும் அவர் தோன்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. பல கிலோ எடையை சுமந்து நீண்ட தூரம் நடந்து செல்லும் கடத்தல்காரர்களை அங்கு ‘காட்டீஸ்’ என அழைப்பார்கள். அதேபோல ஒரு கூட்டத்தை சேர்ந்தவராக அனுஷ்கா நடித்துள்ளார்.
இந்தக் கதைக்கேற்றவாறு, படப்பிடிப்பும் ஒடிசா மலைப்பகுதிகளிலேயே நடத்தப்பட்டது. விக்ரம் பிரபு, அனுஷ்காவின் ஜோடியாக நடித்துள்ளார். சிம்பு–அனுஷ்கா நடித்த ‘வானம்’ படத்தை இயக்கிய கிரிஷ், இந்தப்படத்தையும் தமிழ்–தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்கியுள்ளார். ‘காட்டி’க்காகவே, மற்ற படங்களில் நடிக்காமல் இடைவெளி எடுத்திருந்தார் அனுஷ்கா. அவருக்கு ‘பாகுபலி’ பிறகு அதிகமான வெற்றிப் படங்கள் இல்லாத நிலையில் இந்தப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.