தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு காம்போ நடித்த பல திரைப்படங்கள் ஹிட் உள்ளன. குறிப்பாக, ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘ராசையா’, ‘எங்கள் அண்ணா’, ‘மனதை திருடிவிட்டாய்’ உள்ளிட்ட படங்களில் இவர்களின் நகைச்சுவை ரசிகர்களால் இன்றளவும் ரசிக்கப்படுகிறது.

ஆனால் ஒரு காலக்கட்டத்தில் பிறகு இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை. சினிமாவைச் சார்ந்த விழாக்களில் மட்டுமே சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், நீண்ட வருடங்களுக்கு பின், இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை சாம் ரோட்ரிக்ஸ் என்பவர் இயக்குகிறார். இசையமைப்பவர் யுவன். ஜோம்பி கதை மையமாக இப்படம் உருவாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது.