செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா திரைப்படம், அந்தக் காலகட்டத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வரும் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியிடுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இப்படத்தின் வெளியீட்டை தள்ளிப் போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இப்படத்தை தீபாவளி திருநாளில் வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்.

பெரிய படங்கள் வெளியாகும் தேதிகளை தீர்மானிப்பதில், அவற்றின் ஓடிடி உரிமைகளைப் பெற்றுள்ள நிறுவனங்களே முக்கிய பங்காற்றுகின்றன. தியேட்டர் உரிமைகளை விட அதிக விலையில் அவர்கள் அந்த உரிமைகளை வாங்குகின்றனர்.
ஒரே வாரத்தில் இரண்டு பெரிய படங்களை அவர்கள் ஒரே நேரத்தில் வெளியிடுவதில்லை. ஒரு மாத காலத்தில் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று முக்கிய படங்கள் அவர்களது வெளியீட்டு பட்டியலில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துகிறார்கள். இதனால், தற்போது காந்தா திரைப்படத்தை தள்ளிப் போடுமாறு அந்த நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.