பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டா பக்கத்தில் முழுவதுமாக ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட படத்துக்கு கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார். ஏ.ஐ எல்லாவற்றையும் அழித்துவிடும் கலைஞர்களின் படைப்பாற்றல் வேலைவாய்ப்பு வருமானம் என எதுவும் இல்லாமல் ஆக்கிவிடும் என கூறியுள்ளார். இந்தப் படத்தை தயாரிக்கும் விஜய் சுப்பிரமணியமை டேக் செய்து அனுராக் காஷ்யப் கடுமையாக விமர்சித்துள்ளார். முழுவதுமாக ஏஐ உதவியுடன் ’சிரஞ்சீவி – அனுமன் – தி ஈடர்னல்’ என்ற படம் உருவாகி வருகிறது.


