மிஷ்கின் இயக்கிய பிசாசு படம் 2014-ல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. பாலா தயாரித்த அந்த படத்தில் நாகா, பிரயாகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அதன் தொடர்ச்சியாக பிசாசு 2 படத்தை மிஷ்கின் தொடங்கினார். இந்த படத்தில் ஆண்ட்ரியா மையக் கதாபாத்திரத்தில் நடித்தார். ராக்போர்ட் நிறுவனம் தயாரித்த இப்படம், சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து, “நான் தயாரிப்பாளராக இருந்திருந்தால், இந்த படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டு இருப்பேன்” என்று நடிகை ஆண்ட்ரியா கருத்து தெரிவித்துள்ளார்.
பிசாசு 2 படப்பிடிப்பை முடித்த பின், மிஷ்கின் விஜய் சேதுபதி நடிக்கும் டிரெயின் 2 படத்தையும் இயக்கி முடித்தார். தற்போது ஒரு டிவி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நடித்த சில கவர்ச்சி காட்சிகளை மிஷ்கின் நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்த மனுஷி படம் கூட இன்னும் வெளியாகவில்லை தற்போது இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

