ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். அப்போது இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்து, வசூல் அளவிலும் ஓரளவு வரவேற்பையே பெற்றது. தற்போது மதராஸி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர். முருகதாஸ், தர்பார் படத்தின் தோல்வியைப் பற்றி மனந்திறந்து பேசியுள்ளார்.

தர்பார் படத்தை இன்னும் பிரமாண்டமாகவும், அதிக கவனத்துடன் இயக்கியிருக்க வேண்டும் என இன்று தோன்றுகிறது. அந்தக் கதையில் பல்வேறு பயணங்கள் இருந்தன. அவை தேவையில்லை என நினைத்து சுருக்கமாக எடுத்தேன். ரஜினிகாந்தை வைத்து சில காரணங்களால் லைவ் இடங்களில் படம் பிடிக்க வேண்டாம் எனவும் எண்ணினேன். ஆரம்பத்தில் இது அப்பா–மகள் கதையாக மட்டுமே இருந்தது.
ஆனால் நயன்தாரா கதாபாத்திரம் சேர்த்தபின் கதை போக்கு மாறியது. மும்பையை மையமாகக் கொள்ளாமல், பின்னணியும், சில கதாபாத்திரங்களும் வேறுபட்டிருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்குமோ எனக்குத் தோன்றுகிறது. மிகக் குறுகிய காலத்தில், மிகுந்த உற்சாகத்தில் இயக்கிய படம் என்பதாலேயே சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். கதையை நிதானம் இல்லாமல் மிகவும் சீக்கிரம் எழுதி இயங்கியதே ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றார்.