லெஜண்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஜவுளிக்கடை அதிபர் சரவணன். அந்தப் படத்துக்குப் பிறகு பல்வேறு விமர்சனங்களை சந்தித்திருந்தாலும், அவற்றை ஏற்றுக்கொண்டு தற்போது தனது இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார்.

கொடி, கருடன் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கப்படவில்லை. ஆனால் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சரவணன் இப்படத்தில் கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.