Touring Talkies
100% Cinema

Wednesday, August 20, 2025

Touring Talkies

35 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் மம்முட்டியின் ‘ சாம்ராஜ்யம் ‘

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மம்முட்டி நடித்து கடந்த 1990ல் மலையாளத்தில் வெளியான படம் சாம்ராஜ்யம். மலையாளத்தில் முதன்முதலில் நிழல் உலக தாதாக்களின் உண்மையான பக்கத்தை வெள்ளித்திரையில் காட்டிய படம் இது என்று கூட சொல்லலாம். மம்முட்டி இதில் அலெக்சாண்டர் என்கிற தாதா கேரக்டரில் நடித்திருந்தார். ஜோமோன் என்பவர் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் கேரளாவில் மட்டுமல்ல தமிழகம் மற்றும் ஆந்திராவிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.குறிப்பாக கேரளாவை விட ஆந்திராவில் அதிக நாட்கள் ஓடி மம்முட்டிக்கு தெலுங்கில் ஒரு ஸ்டார் அந்தஸ்தை பெற்று தந்தது. இந்த நிலையில் தற்போது 35 வருடங்கள் கழித்து இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் இந்த படத்தை திரையிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

Read more

Local News