தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகையான கெட்டிகா ஷர்மா, ‘ரொமான்ட்டிக்’, ‘லக்ஷயா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘ராபின்ஹுட்’ படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு கிளாமர் ஆடையில் நடனம் ஆடி ரசிகர்களை மயக்கி இருந்தார். மேலும் சில ஹிந்தி படங்களில் நடித்துவரும் அவர், தற்போது தமிழ்த் திரையுலகிலும் புதிய வாய்ப்புகளைப் பெற்றுவருகிறார்.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் புதிய திரைப்படத்தில் கெட்டிகா ஷர்மா இணைந்துள்ளார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார். இதுமட்டுமின்றி, நடிகர் கார்த்திக்கின் ஒரு புதிய படத்தில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் வெளியான நிதின் – ஸ்ரீலீலா நடிப்பில் வெளிவந்த ‘ராபின்ஹுட்’ திரைப்படத்தில், அதிதா சர்ப்ரைஸ் பாடலுக்கு கெட்டிகா ஷர்மா தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபலமானார்.