‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியும், ஹீரோவாகவும் நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இதில் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ‘அர்ஜுன் ரெட்டி’ மூலம் அறிமுகமான நடிகை ஷாலினி பாண்டேவும், இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் ‘100% காதல்’, ‘கொரில்லா’ போன்ற படங்களில் ஏற்கனவே நடித்த ஷாலினி, இப்போது ‘இட்லி கடை’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.