சீரியல் நடிகை சுபா சமீபத்தில் அளித்த பேட்டியில் பாசிடிவ் கேரக்டர்களை காட்டிலும் நெகடிவ் கேரக்டர்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. நெகடிவ் கேரக்டர்களை கண்டு கோபமுற்று யார் இந்த நடிகை என விசாரிக்கவும் செய்து விடுகின்றனர். அதுபோல சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ ஹீரோயினியாக தான் நடிக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. மக்கள் மத்தியில் நன்றாக ‘ரீச்’ ஆகுமளவுக்கு கதைக்கு முக்கியமான திருப்பமளிக்க கூடிய சிறு கேரக்டர்கள் என்றால் கூட ஓ.கே தான் என்றுள்ளார்.
