2013ஆம் ஆண்டு மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் மீனா நடிப்பில் வெளிவந்த படம் ‘திரிஷ்யம்’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, தமிழில், தெலுங்கில், ஹிந்தியில் ரீமேக்கும் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதன் பின், 2021ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணியில் ‘திரிஷ்யம் 2’ வெளியானது. கொரோனா காலத்தின் காரணமாக படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானாலும், மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பின்னர் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பே ‘திரிஷ்யம் 3’ உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது ‘திரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.