லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான‘கூலி’ திரைப்படம் நேற்றுமுன்தினம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நாகர்ஜுனா, அமீர் கான், சத்யராஜ், சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முதல் நாளில் 151 கோடி வசூலித்து தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்தது
இந்நிலையில், நடிகர் அமீர்கான் சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் கூலி படத்திற்கு சம்பளம் எதுவும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், ‘கூலி’ படத்திற்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் எனக்கு உள்ளது. அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய கிஃப்ட் தான். அதனால் பணம் பற்றி யோசிக்கவில்லை என்றுள்ளார். முன்னதாக கூலி படத்தில் அமீர்கான் நடிக்க 20 கோடி வரை சம்பளம் பெற்றதாக செய்தி பரவிய நிலையில் அமீர்கான் அதற்கு தற்போது பதிலளித்துள்ளார்.