Touring Talkies
100% Cinema

Saturday, August 16, 2025

Touring Talkies

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நெகிழ்ச்சி பொங்க வாழ்த்துக்கள் தெரிவித்த சீமான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், எந்நிலை உயர்ந்தாலும் தன்னிலை மாறாது இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் ஆகச்சிறந்த மானுடப் பண்பினை இயல்பிலேயே கொண்ட தமிழ்த்திரையின் உச்சநட்சத்திரம்  ரஜினிகாந்த் அவர்களுக்கு, என்னுடைய நெஞ்சம் நிறைந்த பொன்விழா ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஐயா ரஜினிகாந்த் அவர்கள், இன்னும் பற்பல ஆண்டுகள் தம் இனிய கலைப்பயணத்தைத் தொடர வேண்டுமென்ற எம் பெருவிருப்பத்தைத் தெரிவிப்பதோடு, ‘கூலி’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படைப்பாக அமைய என்னுடைய அன்பும் வாழ்த்துகளும். என தெரிவித்துள்ளார் . 

- Advertisement -

Read more

Local News