தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்திற்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ திரைப்படத்தை இயக்கும் திட்டத்தில் அவர் இருக்கிறார். ஆனால், அதேசமயம் அதற்கு முன்பாகவே அவர் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார்.

முன்பு, தனுஷ் நடிப்பில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றைப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த படம் இன்னும் ஆரம்பமாகவில்லை.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் குறுகிய காலத்தில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் நடித்துவிட்டு, அதன் பிறகு ‘கைதி 2’ படத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த புதிய படத்தில் அவர் பெறும் சம்பளம் மற்றும் பிற விவரங்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும், லோகேஷ் இந்த படத்திற்காக பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘கைதி 2’ படத்திற்கான தயாரிப்பு நேரத்துக்குள் இந்த படத்தை முடித்துவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.