நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இன்று உலகம் முழுவதும் ‘கூலி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் ரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு திரை பிரபலங்களும் திரையரங்குகளில் ‘கூலி’ படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
படத்தை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், கூலி திரைப்படம் தலைவரின் தரிசனம் போல இருந்தது… தலைவரின் மாஸ், ஸ்வாக், ஸ்டைல் என ஒவ்வொரு தருணமும் அட்டகாசமாக இருந்தது. குறிப்பாக பிளாஷ்பேக் பகுதியில் வரும் அந்த சில நிமிடங்கள் மிகச் சிறந்தவை… படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.