Touring Talkies
100% Cinema

Thursday, August 14, 2025

Touring Talkies

வன்கொடுமைகளுக்கு எதிராக பெண்கள் தைரியமாக குரல் கொடுத்து எதிர்த்து நிற்க வேண்டும் – நடிகை சுவாசிகா OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘வைகை’ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுவாசிகா. மலையாளத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழும் இவர், ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து ‘மாமன்’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் 

வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்கள் என தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் சுவாசிகா அண்மையில் ஒரு நேர்காணலில் பங்கேற்கையில் அப்போது, சினிமா துறையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக கூறப்படுகின்றதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த சுவாசிகா, நான் 15 ஆண்டுகளாக சினிமா துறையில் பணியாற்றி வருகிறேன். இதுவரை நான் அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையையும் சந்தித்ததில்லை. மேலும், இந்த பிரச்சினை சினிமாவில் மட்டும் அல்ல. எல்லா துறைகளிலும் உள்ளது. வேலைக்கு செல்லாத பெண்களுக்கு கூட, ஏன் சிறுமிகளுக்குக் கூட, இங்கே பாதுகாப்பு இல்லை. பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில் தைரியமாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் தளர்ச்சி அடையக் கூடாது. ஒருவர் நம்மிடம் தவறாக நடக்க முயன்றால், அதை நேருக்குநேர் எதிர்கொண்டு, அவர்களை சமூகத்தின் முன் நிறுத்துவதில் தயங்க வேண்டாம். இதனைத் தடுக்க சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும். அதுவரை, பெண்கள்தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

- Advertisement -

Read more

Local News