Touring Talkies
100% Cinema

Thursday, August 14, 2025

Touring Talkies

‘கூலி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கூலி – சைமன் (நாகர்ஜுனா) விசாகப்பட்டின துறைமுகத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி, சர்வதேச அளவில் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்‌. சைமனின் நம்பிக்கைக்குரியவராகவும், மொத்த துறைமுகத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வலதுகையாக தயாள் (சௌபின் ஷாஹிர்) உள்ளார்.

இந்நிலையில், சைமனுக்காக வேலை செய்ய அழைத்து வரப்பட்ட விஞ்ஞானி ராஜசேகரை (சத்யராஜ்) யாரோ ஒருவர் கொலை செய்கிறார். இந்தச் செய்தி, மேன்ஷன் நடத்தி வரும் அவரது நண்பர் தேவாவிற்கு (ரஜினிகாந்த்) தெரிய வருகிறது. ப்ரீத்தி (ஸ்ருதி ஹாசன்) உள்ளிட்ட ராஜசேகரின் மூன்று மகள்களுக்கும் ஆபத்து வரும் என்பதை அறிந்த தேவா, அவர்களை பாதுகாப்பதற்கும் நண்பனின் கொலைக்கான உண்மையை கண்டறிவதற்கும் சைமனின் குழுவில் வேலைக்கு சேர்கிறார். ராஜசேகரைக் கொன்றது யார்? உண்மையில் தேவா யார்? என்பதற்கான பதில்களை வெளிப்படுத்துவதே ‘கூலி’ படத்தின் முக்கியக் கதைக்களமாகும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறு குறும்பு, ஸ்டைலான ஆக்ஷன் மற்றும் டான்ஸ், உணர்ச்சிக் காட்சிகளில் நுணுக்கமான வெளிப்பாடு ஆகியவற்றால் படத்தின் பவர் ஹவுஸாக திகழ்கிறார் ரஜினிகாந்த். மாஸ் காட்சிகளில் தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை கவர்கிறார். ரஜினிகாந்துடன் மோதும் காட்சிகளிலும், தனியாக நடித்த காட்சிகளிலும் தனது வீரியத்தை வெளிப்படுத்தி, ‘தயாளன்’ கதாபாத்திரத்தை ஆழப்படுத்துகிறார் சௌபின் ஷாஹிர். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு வேறொரு பரிமாணத்தை எடுத்து, ஆற்றாமை, வஞ்சம், ஆக்ரோஷம் ஆகியவற்றை கலந்துகொண்டு கோடம்பாக்கத்தில் வலுவான பதிப்பை ஏற்படுத்துகிறார். உணர்ச்சி பூர்வமான காட்சிகளில் இறுதி வரை தீவிரத்தை குறையவிடாமல் வைத்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். ஸ்டைலான வில்லனாக சிறிய சிறிய மேனரிஸங்களால் படத்திற்கு வலு சேர்க்கிறார் நாகர்ஜுனா. அதிர்ச்சி தரும் கொலைகளிலிருந்து ‘I am the Danger’ பாடலின் டான்ஸ் வரையிலும், அவர் க்ளாஸான அதிரடி வில்லனாக மிளிர்கிறார்.விஞ்ஞானியாக வரும் சத்யராஜ், தமக்குக் கிடைத்த கதாபாத்திரத்தை நன்றாகச் செய்துள்ளார். ரக்ஷிதா ராம், கண்ணா ரவி ஆகியோரின் நடிப்பு மனதில் பதிகிறது.

சிறப்பு தோற்றத்தில் ஆமிர் கான் குறுகிய நேரம் தோன்றி தனது வைப்பைச் கொடுக்கிறார். ஆக்ஷன், பரபரப்பு, பிரமாண்டம் ஆகியவற்றை தனது நேர்த்தியான ஒளிப்பதிவால் நிரப்பியுள்ளார் கிரீஷ் கங்காதரன். குறிப்பாக இரவு நேரக் காட்சிகள் மற்றும் துறைமுகக் காட்சிகளில் அவரது கேமரா வலிமையாகத் திகழ்கிறது. படத்தின் திரைமொழிக்கு பிலோமின் ராஜின் பொருத்தமான எடிட்டிங் சிறப்பாகச் சேர்ந்துள்ளது. அனிருத் இசையில் ‘சிகிட்டு’, ‘மோனிக்கா’ பாடல்கள் திரையரங்கத்தை உற்சாகப்படுத்துகின்றன. ‘பவர் ஹவுஸ்’, ‘கூலி டிஸ்கோ’, ‘ஐ ஆம் தி டேஞ்சர்’ போன்ற பின்னணி இசைகள், ஆக்ஷன் காட்சிகளோடு சேர்ந்து படத்தின் மொத்த சக்தியை அதிகரிக்கின்றன.

பின்கதைகளில், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோரின் டீஏஜிங் காட்சிகள் முழுமையான திரையனுபவத்தை அளிக்கின்றன. இளமையான குரலுக்காக எடுத்த முயற்சிக்கும் பாராட்டுகள் கிடைக்கின்றன. சௌபின் ஷாஹிர் கதாபாத்திரமும், சத்யராஜின் கண்டுபிடிப்பும் களமாக அமைந்து சுவாரஸ்யமாகத் தொடங்குகிறது திரைக்கதை. துள்ளலான பாடலுடன் ரஜினிகாந்தின் வருகைக்குப் பிறகு, நேரடியாகக் கதைக்குள் செல்கிறது படம். துறைமுகத்தின் பின்னால் நடக்கும் சட்டவிரோத செயல்பாடுகளையும், அதை ரஜினிகாந்த் வெளிக்கொணரும் முயற்சியையும் விறுவிறுப்பாகச் சொல்வதோடு, பாடல்கள், நடனங்கள், நகைச்சுவை, சேட்டைகள் ஆகியவற்றில் அவர் ஒரே மனிதர் நிகழ்ச்சியாக ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

ஆனால், அந்த விறுவிறுப்பையும் ஷோவையும் சிறிது சிறிதாகக் குறைக்கிறது திரைக்கதை. முந்தைய காட்சியின் முடிவில் முழுமையில்லாமல் கதை நிறுத்தி, அடுத்த காட்சியில் அதை ட்விஸ்ட்டாகச் சொல்வது போன்ற முறைகள், திருப்பங்களை தேவையின்றி நீட்டிக்கிறது. இடைவேளைக்கு முன் வரும் ட்விஸ்ட் மற்றும் சௌபின் ஷாஹிரின் கதாபாத்திர மாற்றங்கள் சிறப்பாகப் பதிந்துள்ளன. ஆனால், இரண்டாம் பாதி தொடக்கம் முதல் கதை நேர்கோட்டில், புதுமையில்லாமல் ஏற்ற இறக்கமின்றி நகர்கிறது. ஆக மொத்தத்தில் கூலி திரைப்படம் ஒருமுறை பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News