சின்ன திரையில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.இதன் காரணமாக, திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த தொடர் இனி, சனிக்கிழமையும் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒளிபரப்பான சில நாள்களில் கூடுதல் நாள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த தொடருக்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.கலைஞர் தொலைக்காட்சியில் தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் ஒளிபரப்பாகி வருகிறது.
