விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக கோமதி பிரியா நடித்து வருகிறார். மலையாளத்தில் ஒளிபரப்பாகும் மகாநதி தொடரிலும் அவர் நாயகியாக நடித்துவருகிறார். இரண்டு தொடர்களிலும் நாயகியாக நடிப்பதுடன், தெலுங்கில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளியின் ஸ்பெஷ நிகழ்ச்சியில் சமையல் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.

இதனால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் படப்பிடிப்புக்காக தொடர்ந்து பறக்கும் நடிகையாக கோமதி பிரியா மாறியுள்ளார். இருப்பினும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பயணங்களில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்டவர். அந்த வகையில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஜடாயு பாறை கோயிலுக்கு அவர் சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு, ஆளரவமற்ற உயரத்தில் இயற்கையை ரசிக்கும் வகையில் ஒரு விடியோவும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது: “சில நேரங்களில், உங்களுக்குத் தேவையானவற்றை வாழ்க்கை தராமல் இருக்கலாம். அதன் காரணம், நீங்கள் அதற்கு தகுதியற்றவர்கள் என்பதல்ல; கடவுளுக்குத் தெரியும், உங்களுக்கு உண்மையில் தகுதியானது எது என்பதை” என பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.