2022ஆம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ‘வதந்தி’ வெப் தொடரில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘வதந்தி’ தொடரின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. கிரைம்-திரில்லர் வகையில் உருவாகும் ‘வதந்தி 2’ தொடரில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்திலும் அவருடன் ‘பீஸ்ட்’, ‘டாடா’ போன்ற படங்களில் நடித்த அபர்ணா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்தொடரின் படப்பிடிப்பு மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அபர்ணா தாஸ் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.