Touring Talkies
100% Cinema

Tuesday, August 12, 2025

Touring Talkies

எனது ஆடிஷனில் நான் சந்தித்த கசப்பான அனுபவம் இதுதான் நடிகை இஷா தல்வார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட பிரபல நடிகை இஷா தல்வார். 2012ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற தட்டத்தின் மறயத்து என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து சில ஆண்டுகள் பிஸியாக நடித்தார். தற்போது, அவருக்கு வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், சமீபத்தில் வழங்கிய ஒரு பேட்டியில், ஹிந்தி திரைப்படத்தில் தனது முதல் பட ஆடிஷனின் போது சந்தித்த ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

அதைப் பற்றி அவர் கூறியதாவது: “நான் நடிக்க இருந்த படத்தின் ஆடிஷனுக்காக என்னை அழைத்தனர். ஆனால், ஆடிஷன் நடத்த அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் நாலு பேர் மட்டும் இருக்கும் தனி அறை அல்ல. அதற்கு பதிலாக, கிட்டத்தட்ட 100 பேர் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த ஒரு உணவகத்தில் என்னை ஒரு மேசையில் அமரவைத்து, திடீரென கதறி அழுதபடி ஒரு வசனத்தைச் சொல்லச் சொன்னார்கள். அப்போதுதான் நடிக்க வாய்ப்பு தேடி வந்த எனக்கு, அவர்களின் இந்த செயல்முறை என் தன்னம்பிக்கையை கடுமையாக பாதித்தது. எனக்கு அப்படி செய்ய முடியாது என்று நான் மறுத்துவிட்டேன்.

அதன் பிறகு, அந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தனி அறையில் ஆடிஷன் செய்து காட்டுவதைப் போல, படப்பிடிப்பில் பலரின் முன்னிலும் நடித்து காட்டும் தைரியம் எனக்கிருக்கிறது. ஆனால், அந்த நம்பிக்கை இல்லாதவர்களே இவ்வாறு 100 துணை நடிகர்களின் முன்னிலையில் ஆடிஷன் நடத்துவார்கள். பொதுவெளியில் இப்படி நடத்துவது மிகவும் மலிந்த எண்ணம். எப்போதும் புதியவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News